ரீல்ஸ் மோகம் விபரீதம்: 60 அடி உயர தண்ணீர் தொட்டியிலிருந்து விழுந்து சிறுவன் பலி

1 Min Read

உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த் நகரில், ரீல்ஸ் எடுப்பதற்காக 60 அடி உயர தண்ணீர் தொட்டியில் ஏறிய ஐந்து சிறுவர்களில், ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த் நகரில் நேற்று (02) மதியம், ஆபத்தை அறியாமல் ரீல்ஸ் படமாக்குவதற்காக 5 சிறுவர்கள் 60 அடி உயர தண்ணீர் தொட்டியின் மீது ஏறினர். உச்சியிலிருந்து கீழே இறங்கும்போது, அவர்களின் பாரம் தாங்காமல் ஏணி உடைந்ததில், மூன்று சிறுவர்கள் சுமார் 50 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தனர்.

அவர்களை மீட்கும் முயற்சிகள் தொடர்ச்சியான பின்னடைவுகளைச் சந்தித்தன. நிலைமை மோசமடைந்ததால், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வழிகாட்டுதலின்படி, மாநில அரசு இந்திய விமானப்படையின் உதவியை நாடியது. இந்த மீட்புப் பணிக்காக ஒரு எம்ஐ-17 வி5 ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. சுமார் 16 மணி நேர முயற்சிக்குப் பிறகு, இன்று அதிகாலை 5:20 மணியளவில், தண்ணீர் தொட்டியின் மேல் சிக்கிக்கொண்டிருந்த இரண்டு சிறுவர்களும் ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *