காசா உதவி படகு குழுவை சேர்ந்த இருவர் இஸ்ரேல் மன்றில் ஆஜர்

1 Min Read

இஸ்ரேலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள காசாவுக்குச் சென்று கொண்டிருந்த மனிதாபிமான உதவிக் கப்பல் குழுவைச் சேர்ந்த இருவர் நேற்று இஸ்ரேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

ஸ்பெயினைச் சேர்ந்த சைஃப் அபு கெஷெக் மற்றும் பிரேசிலைச் சேர்ந்த தியாகோ அவிலா ஆகிய இருவரும் அஷ்கெலோனில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக சர்வதேச ஒருங்கிணைப்பாளர் மிரியம் அசெம் தெரிவித்தார்.

காசா உதவி படகு குழு செயற்பாட்டாளர்களான இந்த இருவரையும் மேலும் இரண்டு நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

குளோபல் சுமுத் கப்பல் குழுவின் ஒரு பகுதியாக காசாவுக்குப் புறப்பட்ட பல படகுகளில் பயணித்தவர்களில் இந்த இருவரும் அடங்குவர். இக்கப்பல் குழுவில் பயணித்தவர்கள் கடந்த வியாழக்கிழமை கிரீஸ் கடற்பரப்பில் இஸ்ரேலியப் படையினரால் இடைமறிக்கப்பட்டனர். அந்த படகுகளில் இருந்தவர்களில் 168 பேர் கிரீட் தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதோடு, இருவர் விசாரணைக்காக இஸ்ரேலுக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

இந்த இருவர் மீது எந்தக் குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படவில்லை, ஆனால் அபு கெஷெக், அவிலா ஆகிய இருவருக்கும் எதிராக, ஒரு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு மற்றும் வெளிநாட்டு முகவர்களுடன் தொடர்பு உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றும் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *