ஒரே ஏவுகணையில் 10 இலக்குகளை தாக்கும் – அக்னி 6 ஏவுகணையை தயாரிக்க உள்ள இந்தியா

1 Min Read

மத்திய அரசு ஒப்புதல் அளித்த உடன் அக்னி 6 ஏவுகணையை தயாரிக்க தொடங்குவோம் என DRDO அறிவித்துள்ளது.

இந்தியாவின் அக்னி 6 ஏவுகணை

இந்தியாவின் ஏவுகணை தொழில்நுட்பத்தில் முக்கிய மைல்கல்லான அக்னி ஏவுகணைகளை இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு(DRDO) உருவாக்கி வருகிறது.

தற்போது அக்னி 1 முதல் அக்னி 5 வரை ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அக்னி 6 ஏவுகணையை உருவாக்க DRDO தயாராக உள்ளதாக அதன் தலைவர் சமீர் வி. காமத் தெரிவித்துள்ளார்.

ஒரே ஏவுகணையில் 10 இலக்குகளை தாக்கும் - அக்னி 6 ஏவுகணையை தயாரிக்க உள்ள இந்தியா | Drdo Chief Says Ready To Make Agni 6

டெல்லியில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பேசிய அவர், அக்னி 6 ஏவுகணை திட்டம் குறித்த இறுதி முடிவு மத்திய அரசின் கொள்கை முடிவைப் பொறுத்தது என்றும், அரசாங்கம் அனுமதி வழங்கியவுடன் இதற்கான பணிகள் உடனடியாகத் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஹைப்பர்சோனிக் குரூஸ்’ ஏவுகணையில், ‘ஸ்க்ராம்ஜெட்’ இன்ஜின் பொருத்தப்பட்டு, அது பறக்கும் போதே ஆற்றல் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரே ஏவுகணையில் 10 இலக்குகளை தாக்கும் - அக்னி 6 ஏவுகணையை தயாரிக்க உள்ள இந்தியா | Drdo Chief Says Ready To Make Agni 6

குறுகிய தூர ஏவுகணையான, ‘பிரளய்’ தற்போது இறுதிக்கட்ட சோதனையில் உள்ளது. விரைவில் ராணுவத்தில் இணைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 6 ஏவுகணை, சுமார் 12,000 கிமீ வரை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது.

மேலும், மேம்பட்ட மல்டிபிள் இன்டிபென்டென்ட்லி டார்கெட்டபிள் ரீ-என்ட்ரி வெகிக்கிள் (MIRV) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதால், ஒரே நேரத்தில் 10 இலக்குகளைத் தாக்க முடியும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *