மலையக மக்களின் உரிமைகளுக்காக இ.தொ.கா தொடர்ந்தும் குரல் கொடுக்கும்

1 Min Read

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை காரியலயமான சௌமியபவனில் இன்று (01) மே தின கொடியேற்றும் நிகழ்வு கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் செந்தில் தொண்டமானால் கட்சியின் கொடி ஏற்றப்பட்டதுடன், அனைத்து தொழிலாளர்களுக்கும் மே தின வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மேலும், இந்நிகழ்வில் கருத்து தெரிவிக்கையில்,

”நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இவ்வருடத்திற்கான மே தின நிகழ்வு தோட்ட வாரியாக இடம்பெறுகின்றது. கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையின் போது தோட்ட வாரியாக தான் மே தின நிகழ்வுகள் இடம்பெற்றது. ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க காலத்தில் நாடு பொருளாதார நெருக்கடியை சந்தித்த நேரத்திலும், யுத்தத்தின் உச்சக்கட்ட காலத்திலும், கொரானா தொற்றுக் காலத்திலும், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் போதும் மக்களை அசௌகரியத்தில் தள்ளிவிடாது மக்களின் பொருளாதார சுமையை கருத்தில் கொண்டு இ.தொ.காவின் மே தின கூட்டம் தோட்ட வாரியாக இடம்பெற்றது.

நாட்டில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நுவரெலியா, பதுளை, கண்டி,குருநாகல், இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தளை, மொணராகலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அங்கத்தவர்கள் கலந்துக் கொள்வதற்கான போதுமான எரிபொருள் வசதிகள் இல்லாததால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் பிரமுகர்கள், அமைப்பாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் தலைமையில் தோட்ட வாரியாக அனைவருடனும் ஒன்றினைனைந்து தோட்டங்களில் மே தின கொண்டாங்கள் இடம்பெறுகின்றது.

மேலும் இதுவரை காலமும் மலையக மக்களின் அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொடுத்தது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பதை எவராலும் மறுக்க முடியாது. எதிர்காலத்திலும் மலையக மக்களின் உரிமைகளை பாதுகாப்பதிலும், எதிர்காலத்தில் உரிமைகளை வென்று எடுப்பதிலும் இதொகா முன்னின்று செயற்படும் என” தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *