இம்மாத எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை

1 Min Read

எரிபொருள் விலைகளில் இம்மாதம் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எனினும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய விலை திருத்தங்கள் தொடர்பில் உரிய நேரத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என கூட்டுத்தாபனத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கடந்த மார்ச் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பிற்குப் பின்னர் சந்தையில் தற்போது நிலவும் விலைகளே தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி,
92 ஒக்டேன் ரக பெற்றோல் – ரூ. 398
95 ஒக்டேன் ரக பெற்றோல் – ரூ. 455
1 லீற்றர் ஒட்டோ டீசல் ரூ. 382
1 லீற்றர் சுப்பர் டீசல் ரூ. 443 இற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

அத்துடன் 1 லீற்றர் மண்ணெண்ணெய் ரூ. 255 இற்கும் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *