பாலமுனை அல்-அறபா விளையாட்டுக் கழகம் மற்றும் பாலமுனை ரைஸ்டார் விளையாட்டு கழக அணிகளுக்கிடையிலான மல்டிக் கலர் சீருடை டி20 கடின பந்து கிரிக்கெட் சுற்றுத் தொடரின் முதல் போட்டியில் அல்-அறபா அணி வெற்றி பெற்றது. பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த சனிக்கிழமை (18) இடம் பெற்ற இத்தொடரின் முதல் போட்டியில் அல்-அறபா அணியினர் 5 ஓட்டங்களால் ரைஸ்டார் அணியை வென்றமை குறிப்பிடத்தக்கது.




