நாம் வாழும் காலத்தில் செய்யும் நன்மைகள், தீமைகளை பதிவு செய்து வைத்திருப்பவர் சித்திரகுப்தர் தான் என சொல்லப்படுகிறது. நாம் இறந்த பிறகு, நாம் செய்த கர்ம வினைகளின் அடிப்படையில் நாம் சொர்க்கத்திற்கு செல்ல வேண்டுமா அல்லது நரகத்திற்கு செல்ல வேண்டுமா என்பதை சித்திரகுப்தர் தான் தீர்மானிக்கிறார்.
நாம் மரணத்திற்கு பிறகு நரகத்தில் துன்பங்களை அனுபவிக்கக் கூடாது, கடந்த காலங்களில் செய்த தவறுகள் அல்லது பாவங்களுக்கு பிராயசித்தம் செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் சித்ரா பௌர்ணமி நாளில் தங்களின் தவறுகளுக்காக வருந்தி, சித்ரகுப்தரை மனதார வேண்டி, சில வழிபாடுகளை செய்வதால் அவர்களின் பாவங்களுக்கு மன்னிப்பு வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது.



