இந்தியா இராமகிருஷ்ண மிஷன் சுவாமி சர்வரூபானந்த ஜீ நிந்தவூர் முருகன் ஆலய விஜயம்

1 Min Read

இராமகிருஷ்ண மிஷன் இலங்கைக்கான முன்னாள் தலைவரும், இந்திய இராமகிருஷ்ண மிஷன் காசி மடத்தின் தலைவருமான ஸ்ரீமத் சுவாமி சர்வரூபானந்த ஜீ மகராஜ் நிந்தவூரில் அண்மையில் கும்பாபிஷேகம் கண்ட ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.

அவரை ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் இராமலிங்கம் ரவீந்திரதேவன் பாதநமஸ்காரம் செய்து வரவேற்றார். சுவாமியுடன் ஆலயத் தலைவரின் இளைய சகோதரர் மருத்துவர் இராமலிங்கம் சகாதேவன் தம்பதியினரும் வருகை தந்தனர்.

சுவாமி சர்வரூபானந்த ஜீ மகராஜ் ஆலயத்தை தரிசித்து ஆசி வழங்கியதுடன் தலைவரின் மூத்த சகோதரர் இராமலிங்கம் வாமதேவனுடனும் கலந்துரையாடினார்.

அவர்களுடன் கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய அதிகாரி மருத்துவர் நடராசா ரமேஷ் திருமதி வத்சலா ரமேஷ் உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *