எம்பிலிபிட்டிய, குட்டிகல பகுதியிலுள்ள கச்சிகல வாவியில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்கள் 60 மற்றும் 78 வயதுடைய இரு ஆண்கள் ஆவர்.

குட்டிகல பொலிசார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




