இளநீர் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது என்று கருதப்படுகிறது. உடல் எடை குறைப்பிற்கு இளநீர் எவ்வாறு உதவுகிறது என்பதை விரிவாகப் புரிந்துகொள்வோம்.
இளநீர்
இளநீர் பெரும்பாலும் ஒரு சிறந்த பானமாக பார்க்கப்படுகின்றது. இதில் பல அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் வைட்டமின்களின் நல்ல ஆதாரமாக இருப்பதால், இது பொதுவாக உடற்பயிற்சிக்குப் பின்னர் குடிப்பது மிகவும் நல்லது.
இந்த நிலையில் ஆய்வுகளின் படி இளநீர் குடித்தால் நமது உடல் எடை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் என்று கூறப்படுகின்றது. இதை பற்றி பதிவில் பார்க்கலாம்.

நன்மைகள்
கலோரிகள் குறைவு
இளநீரில் கலோரிகள் மிகக் குறைவு. ஒரு கப் இளநீரில் சுமார் 46 கலோரிகள் உள்ளன. நாம் குடிக்கும் செயற்கை பானங்கள் சோடாக்கள் பழச்சாறுகளை விட இளநீரில் கலோரி குறைவு. எனவே உடல் எடை கட்டுப்பாடகவும் இருக்க வேண்டும் ஆனால் உடலை நீரேற்றமாகவும் வைத்திருக்க வேண்டும் என நினைப்பவர் இந்த இளநீரை குடித்து வரலாம்.
புரதம்
புரதம் பசியைக் கட்டுப்படுத்தும் ஒரு பதார்தமாக இருக்கிறது. இதனால் நாம் அதிகப்படியான கலோரிகளை உட்கொள்வதை தவிர்க்க முடியும். ஒரு கப் இளநீரில் சுமார் 2 கிராம் புரதம் உள்ளது. இது ஆரோக்கியமான தசைகளை உருவாக்குவதற்கு மிகவும் சிறந்தது. எனவே அதிகப்படியான உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு இளநீர் ஒரு சிறந்த தேர்வாகும்.

நார்ச்சத்து நிறைந்தது
இளநீரில் நிறைய நார்ச்சத்து உள்ளது. நார்ச்சத்து, செரிமான மண்டலத்தின் வழியாக உணவு உறிஞ்சப்படுவதை மெதுவாக்க உதவுகிறது. இது இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்க உதவுகிறது. ஒரு கப் இளநீரில் 3 கிராம் நார்ச்சத்து உள்ளது. எனவே, ஒரு கப் இளநீர் குடிப்பது உணவு மீதான அதீத ஆசையையும், இரத்த சர்க்கரை அளவில் ஏற்படும் திடீர் ஏற்ற இறக்கங்களையும் தடுக்க உதவும்.
பொட்டாசியம்
இளநீர் பொட்டாசியத்தின் ஆதாரம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது உணவை ஆற்றலாக மாற்ற உதவுகிறது. ஒரு கோப்பை இளநீரில் 300 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது. இது உடலுக்கு அவசியமான ஒரு கனிமம் மற்றும் தசைகளை வலுப்படுத்த உதவுகிறது.
எனவே, ஆரோக்கியமான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சியுடன், உங்கள் தினசரி எடை குறைப்பு உணவில் இளநீரையும் சேர்த்துக் கொண்டால், உடல் எடை குறையும்.
இதை பகல் நேரங்களில் குடிப்பது இன்னும் சிறந்தது. மேலும் சுவைக்காக சியா விதைகள் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம்.



