ஜோதிடம் என்பது ஒவ்வொரு கிரக நகர்வுகளைக் கொண்டு கணித்து சொல்லக் கூடியதாக இருக்கிறது. காரணம் கிரக மாற்றங்கள் தனிநபர் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் மாற்றத்தை உண்டு செய்யும். அந்த வகையில் வருகின்ற மே மாதம் முக்கியமான கிரக சேர்க்கை நடைபெறுகிறது.
அதாவது மே 11ஆம் தேதி நவக்கிரகங்களின் தலைவராக இருக்கக் கூடிய சூரியனும் கிரகங்களில் தளபதியாக இருக்கக்கூடிய செவ்வாய் பகவானும் நேர்கோட்டில் இணைய இருக்கிறார்கள். இந்த முக்கிய சேர்க்கை மேஷ ராசியில் நடக்க இருக்கிறது.
இந்த இரண்டு கிரக சேர்க்கைகள் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை 12 ராசிகளுக்கும் ஏற்படுத்த போகிறது. இருப்பினும் சில ராசிகள் மிகப்பெரிய அளவில் நன்மையும் வாழ்க்கையில் நிதர் திருப்பங்களையும் எதிர்பாராத யோகங்களையும் பெறப்போகிறார்கள். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசியினருக்கு செவ்வாய் மற்றும் சூரியனின் இணைவானது இவர்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு புதிய மாற்றங்களை கொண்டு வந்து சேர்க்க போகிறது இந்த காலகட்டங்களில் இவர்கள் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் இவர்களுக்கு சாதகமாகவே அமையும்.
புதிதாக வண்டி வாகனம் வீடு வாங்கக்கூடிய யோகம் மற்றும் நினைத்தது போல் காரியம் நிறைவேறும். நீண்ட நாட்கள் முடிவுக்கு வராத விஷயங்களை பிரச்சனை இன்றி முடித்து விடுவீர்கள்.
சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு செவ்வாய் மற்றும் சூரியனின் இணைவானது இவர்களுக்கு நேர்மறையான ஆற்றலை பெற்றுக் கொடுக்கப் போகிறது. நீண்ட நாட்களாக பொருளாதாரத்தில் சந்தித்து வந்த சிக்கல்களில் இருந்து இவர்கள் விடுதலை பெற போகிறார்கள்.
அலுவலகத்தில் எதிர்பாராத விதமாக பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கப் போகிறது. வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு நினைத்தது போல் நல்ல வாய்ப்புகள் அமையும்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு செவ்வாய் மற்றும் சூரியனின் இணைவானது இவர்களுக்கு எதிர்பாராத விதமாக நிறைய நன்மைகளை செய்யப்போகிறது. இந்த காலகட்டங்களில் எடுக்கக் கூடிய முயற்சிகள் எல்லாவற்றிலும் வெற்றியை பெறுவீர்கள்.
புதிதாக தொழில் துவங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வரும். வருமானத்தை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு வேலையில் நிறைய வாய்ப்புகள் தேடி வரும்.




