இளவரசிகள் இருவர் தங்கள் பட்டங்களை துறக்கவேண்டும்: மக்கள் விருப்பம்

1 Min Read

சர்ச்சையில் சிக்கிய இளவரசர் ஆண்ட்ரூவின் மகள்களான இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனி ஆகிய இருவரும் தங்கள் பட்டங்களைத் துறக்கவேண்டும் என குரல்கள் வலுக்கத் துவங்கியுள்ளன.

மக்கள் விருப்பம்

ஆக, மக்கள் அது குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிவதற்காக ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது.

இளவரசிகள் இருவர் தங்கள் பட்டங்களை துறக்கவேண்டும்: மக்கள் விருப்பம் | Uk Peoples Wish Beatrice And Eugenie Resign Title

தி மிரர் ஊடகம் நடத்திய அந்த ஆய்வில், 56 சதவிகித மக்கள், இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனியின் பட்டங்கள் பறிக்கப்படவேண்டும் என தெரிவித்துள்ளார்கள்.

42 சதவிகிதம் பேர் அவர்கள் பட்டங்களை பறிக்கவேண்டாம் என்று கூறியுள்ளார்கள்.

இதுபோக, சர்ச்சையில் சிக்கிய ஆண்ட்ரூ தான் தங்கியிருந்த வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதுபோல, ராஜ குடும்பத்துக்கு சொந்தமான வீடுகளில் வாழும் இளவரசிகள் பீட்ரைஸும் யூஜீனியும் தாமாக முன்வந்து அந்த வீடுகளை விட்டு வெளியேறவேண்டும் என்று கூறியுள்ளார் ராஜ குடும்ப நிபுணரான ஜென்னி பாண்ட் என்பவர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *