பதின்மவயதினருக்கு சமூக ஊடகத் தடை: சோதனை அடிப்படையில் செயல்படுத்த பிரித்தானியா திட்டம்

1 Min Read

பதின்மவயதினர் சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிப்பதையும், மொபைல், இணையம் ஆகியவற்றை பயன்படுத்தும் நேரத்தை கட்டுப்படுத்துவதையும் சோதனை அடிப்படையில் செயல்படுத்த பிரித்தானியா திட்டமிட்டுவருகிறது.

பிரித்தானிய அரசின் இந்த சோதனை முயற்சியில் 300 பதின்மவயதினர் பங்கேற்க இருக்கிறார்கள்.

பதின்மவயதினருக்கு சமூக ஊடகத் தடை: சோதனை அடிப்படையில் செயல்படுத்த பிரித்தானியா திட்டம் | Uk Trails Social Media Ban For Teenagers

அவர்களில் ஒரு குழுவினருக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த முழுமையான தடையும், ஒரு குழுவினருக்கு இரவு நேரங்களில் பயன்படுத்த தடையும் விதிக்கப்படும்.

மற்றொரு குழுவினருக்கு ஒரு மணி நேரம் மட்டுமே சமூக ஊடகங்கள் பயன்படுத்த அனுமதியளிக்கப்படும், ஒரு குழுவினருக்கு எந்த தடையும் கிடையாது.

ஆக, இந்த 300 பேரின் அனுபவங்களும் பதிவு செய்யப்பட்டு, சமூக ஊடகங்கள் தடை அவர்களுடைய வாழ்க்கை முறை, தூக்கம் மற்றும் படிப்பின் மீது என்ன விதமாக தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அரசு ஆய்வு செய்ய உள்ளது.

ஆய்வின் முடிவுகளைப் பொறுத்து சமூக ஊடகத்தடை முதலான விடயங்களை முடிவு செய்ய அரசு திட்டமிட்டுவருகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *