முதல் பந்திலேயே நிக்கோல்ஸ் டக்அவுட்! பவுண்டரி அடித்து சதம் மற்றும் வெற்றி இலக்கை எட்டிய டாம் லாதம்

1 Min Read

தி ஃபோர்ட் டிராபி தொடர் போட்டியில் கான்டெர்பரி அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நார்த்தர்ன் டிஸ்ட்ரிக்ஸ் அணியை வீழ்த்தியது.

158 ஓட்டங்களுக்கு சுருண்ட நார்த்தர்ன் டிஸ்ட்ரிக்ஸ்

மனிபவர் ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில் நார்த்தர்ன் டிஸ்ட்ரிக்ஸ் மற்றும் கான்டெர்பரி அணிகள் மோதின.

canterbury win by 8 wicketsNew zealand cricket/Screenshot

முதலில் ஆடிய நார்த்தர்ன் டிஸ்ட்ரிக்ஸ் அணி 42.5 ஓவர்களில் 158 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஹென்றி கூப்பர் 30 ஓட்டங்களும், டிம் ப்ரிங்கில் 27 ஓட்டங்களும் எடுத்தனர்.

ஷியட், மைக்கேல் ரே மற்றும் ஹர்பர் தலா 2 விக்கெட்டுகளும், மெக்கொனி மற்றும் டேவி தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

canterbury win by 8 wickets New zealand cricket/Screenshot

டாம் லாதம் சதம்

பின்னர் களமிறங்கிய கான்டெர்பரி அணியில் கேப்டன் ஹென்றி நிக்கோல்ஸ் முதல் பந்திலேயே டக்அவுட் ஆனார்.

அடுத்து மரியு 29 ஓட்டங்கள் எடுத்து வெளியேற, டாம் லாதம் நங்கூரமாய் நின்று ஆடினார். தொடர்ச்சியாக பவுண்டரிகளை விரட்டி அரைசதம் கடந்தார்.

வெற்றிக்கு 1 ரன் தேவைப்பட்டபோது, 99 ஓட்டங்களில் இருந்த டாம் லாதம் பவுண்டரி அடித்து சதம் விளாசியதுடன் அணியையும் வெற்றி பெற வைத்தார். அவர் 97 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 103 ஓட்டங்கள் குவித்தார்.

Tom Latham New zealand cricket/Screenshot

Tom LathamNew zealand cricket/Screenshot

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *