உக்ரைன் மீதான போர் தீவிரம்; துருக்கி கவலை

1 Min Read

உக்ரைன் போரில் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் சமீபத்திய நாட்களில் அதிகரித்திருப்பது குறித்து துருக்கி கவலை கொண்டுள்ளதென வெளியுறவு அமைச்சர் ஹக்கான் ஃபிடான் நேற்று மொஸ்கோவில் தெரிவித்தார்.

இலட்சக்கணக்கானோரின் மரணத்திற்கு காரணமாகியுள்ள நான்காண்டு காலப் போரை முடிவுக்குக் கொண்டுவர முயலும் துருக்கி, ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.

ரஷ்யாவுக்கான விஜயத்தின் போது அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு குறிப்பிட்ட துருக்கி வெளிவிவகார அமைச்சர், உக்ரைன் போரில் சமீபத்திய நாட்களில் ஏற்பட்டுள்ள தீவிரமும், அது புவியியல் ரீதியாக விரிவடையும் அபாயமும் மிகுந்த கவலைக்குரிய விஷயமாகும்.

போர்முனைகளுக்குப் பின்னால் உள்ள இலக்குகள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பதும், கருங்கடலில் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் தாக்குதல்களும் மூன்றாம் தரப்பினரின் நலன்களுக்குத் தீங்கு விளைவிக்கும் விளைவுகளைக் கொண்டுள்ளன. எனவே, சில பதற்றத் தணிப்பு நடவடிக்கைகள் அவசியமாகின்றன என்றும் சுட்டிக்காட்டினார்.

அரப் நியூஸ்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *