எபோலா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் காணப்படும் முக்கிய பலவீனங்களை துரிதகதியில் சீர்செய்யாவிட்டால், அந்நோயைக் கட்டுப்படுத்த பல பில்லியன் டொலர்களைச் செலவிட நேரிடும் என்று ஆபிரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையங்களின் தலைவர் எச்சரித்துள்ளார். என்றும் அவர் செவ்வாயன்று கூறினார்.
கொங்கோவில் ஏற்பட்டுள்ள எபோலா பரவல் இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமானதாக இருக்கலாமெனக் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நோய்க்கு சரியான சிகிச்சையோ அல்லது தடுப்பூசியோ இல்லாததால் புண்டிபுக்யோ வகை எபோலாவால் கொங்கோவில் 830 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 196 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்த பிறகும் உடல் திரவங்கள் மூலம் பரவும் இந்நோய், கொங்கோ ஜனநாயகக் குடியரசின் மூன்று மாகாணங்களில் வேகமாகப் பரவி வருவதாக அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நோய்ப் பரவலை நாம் மிக விரைவில் தடுத்து நிறுத்தாவிட்டால், இது மேற்கு ஆபிரிக்கா மற்றும் கிழக்கு கொங்கோ ஜனநாயகக் குடியரசில் நாம் சந்தித்ததை விட மோசமானதாக இருக்கும் என்று புருண்டியில் நடைபெற்ற ஆபிரிக்க நாடுகளின் தலைவர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் மெய்நிகர் கூட்டத்தில் ஆபிரிக்கா நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையங்களின் பணிப்பாளர் நாயகம் ஜீன் கசேயா தெரிவித்தார்.சி.என்.என்.



