நான் தலையிட்டிராவிடில் இஸ்ரேல் எப்போதோ தகர்க்கப்பட்டிருக்கும்

1 Min Read

நான் தலையிடாமல் இருந்திருந்தால், இஸ்ரேல் எப்போதோ தகர்க்கப்பட்டிருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கட்டார் நாட்டு அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானுடன் இணைந்து ஜி 7 உச்சி மாநாட்டில் உரையாற்றிய ட்ரம்ப், ‘அமெரிக்கா இல்லாமல் இஸ்ரேல் இருந்திருக்காது. அத்தோடு நான் இல்லாமலும் இஸ்ரேல் இருந்திருக்காது, ஏனென்றால் நான் செய்ததைச் செய்ய வேறு எந்த ஜனாதிபதியும் முன்வரவில்லை என்றும் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், ‘ஈரானுடனான அமைதி ஒப்பந்தத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் தொடர்ச்சியான தாக்குதல்களை லெபனானில் மேற்கொள்ளும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

எனக்கு பிபி (நெதன்யாகு) யுடன் ஒரு சிறந்த உறவு இருந்தது, ஆனால் இப்போது லெபனான் விஷயத்தில் பிபி(நெதன்யாகு) இன்னும் பொறுப்புடன் இருக்க வேண்டும்.

லெபனான் ஒரு காலத்தில் ஒரு சிறந்த நாடாக இருந்தது. அது பேராசிரியர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் இருந்த ஒரு நாடாகும். சிறந்த அறிவாளிகள் லெபனானில் இருந்தனர். இப்போது அது மிகவும் மோசமாக உள்ளது என்றும் குறிப்பிட்டார். இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரானுடன் முன்னெடுத்த போரை முடிவுக்கு கொண்டு வரவென அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தில் லெபனான் யுத்த நிறுத்தமும் ஒரு பகுதியாகும். இந்த சூழலில் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை முன்னெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே ட்ரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *