செம்மணி புதைகுழி அகழ்வின் 19ஆவது நாளான நேற்றுவரை 318 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு அவற்றில் 302 எலும்பு எச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்ற அகழ்வு பணிகளில் அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்பு எச்சங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நேற்று புதிதாக 4 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன் 16 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவற்றுள் இதுவரை காலமும் மொத்தமாக 20 தொகுதி எலும்புக்கூடுகள் குவியல்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதோடு அதில் சிறுவர்களினுடைய என்புத் தொகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. றுகுணு பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் அகழ்வுப்பணி மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



