கணவனைக் காணவில்லை என நாடகமாடிய இளம்பெண்: தெரியவந்த திடுக் உண்மை

1 Min Read

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், தன் கணவனைக் காணவில்லை என பொலிசில் புகாரளித்தார் ஒரு இளம்பெண்.

விசாரணையின்போது, தன் கணவனைக் கொலை செய்ததில் அவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

கணவனைக் காணவில்லை என புகாரளித்த இளம்பெண்

பெங்களூருவின் புறநகர்ப்பகுதி ஒன்றில் தன் கணவனான அபிஜித் பண்டித்துடன் (25) வாழ்ந்துவந்தார் 21 வயதேயான அர்ச்சனா சௌஹான்.

கடந்த வியாழக்கிழமை, தனது கணவனைக் காணவில்லை என பொலிசில் புகாரளித்தார் அர்ச்சனா.

கணவனைக் காணவில்லை என நாடகமாடிய இளம்பெண்: தெரியவந்த திடுக் உண்மை | Wife Drama Missing Plot After Murder Husband

அர்ச்சனாவும் அபிஜித்தும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள். விசாரணையின்போது, அதே பகுதியைச் சேர்ந்த பாருல் பால் என்பவர் மீது பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட, பொலிசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்கள்.விசாரணையின்போது, தான் அபிஜித்தைக் கழுத்தை நெறித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் பாருல்.

அதாவது, தன் மனைவிக்கு பாருலுடன் தொடர்பு இருப்பதாக அபிஜித்துக்கு சந்தேகம் ஏற்படவே, அதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் வாக்குவாதம் உருவாகியுள்ளது.

இந்நிலையில், ஒருநாள் மூவரும் சேர்ந்து மது அருந்தியிருக்கிறார்கள். பின்னர் அர்ச்சனாவின் சம்மதத்துடன் அபிஜித்தைக் கொலை செய்துள்ளார் பாருல்.

இருவருடைய வாக்குமூலத்தையும் தொடர்ந்து, ஏரி ஒன்றின் அருகே வீசப்பட்டிருந்த அழுகிய நிலையிலிருந்த அபிஜித்தின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பாருலும் அர்ச்சனாவும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். விசாரணை தொடர்கிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *