பொருளாதார நெருக்கடியில் வாடும் மக்களின் துயர்துடைக்க ஒன்றுபடுவோம்

1 Min Read

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், துயரப்படும் மக்களுக்கு நிவாரணங்களையும் ஆறுதலையும் பெற்றுக்கொடுக்க அனைவரும் ஒன்றிணைந்து முன்வர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பெல்லன்வில ரஜமகா விகாரையின் வெசாக் வலயத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், ஒரு நாடாக நாம் தற்போது எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டண உயர்வு உள்ளிட்ட எண்ணற்ற சவால்களைச் சந்தித்து வருகிறோம். இந்த இக்கட்டான சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலன்புரி உதவிகளை இல்லாதவர்களுக்குப் பெற்றுக்கொடுக்க அனைவரும் அக்கறையுடனும், கருணையுடனும் செயல்பட வேண்டும் என்றார். பௌத்த மதத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர், நாட்டின் உயரிய சட்டத்தில் புத்த சாசனத்திற்கு மேலான இடம் வழங்கப்பட்டுள்ளதை நினைவு கூர்ந்தார். பௌத்த மதத்தைப் பாதுகாத்து மேம்படுத்துவது அனைவரினதும் பொறுப்பு எனக் குறிப்பிட்ட அவர், அதேவேளையில் பிற மதங்களையும், பிற இனக் கலாசாரங்களையும் பாதுகாப்பதன் மூலமே ஒன்றுபட்ட தாய்நாட்டின் ஒற்றுமையையும் நாட்டின் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க முடியும் என்றும் வலியுறுத்தினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *