பிள்ளையானின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

1 Min Read

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தனது கைது மற்றும் தடுப்புக்காவலை சவாலுக்கு உட்படுத்தி, பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான தீர்ப்பையே உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இவ்வழக்கு தொடர்பான வாய்மொழி சமர்ப்பணங்களின் விசாரணை நேற்று நிறைவடைந்துள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. அந்த நிலையில் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றம் அதன் தீர்ப்பை பிறிதொரு திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *