ஒரு கிலோ ஜப்பான் மாம்பழம் இந்தியாவில் ரூ.3 இலட்சம்

1 Min Read

ஒடி​சா​வின் மால்​கான்​கிரி மாவட்​டம், தமாசா கிராமத்​தைச் சேர்ந்த விவ​சாயி தேபா போடி​யாமி.

இவர் தனது தோட்​டத்​தில் 4 ஆண்​டு​களுக்கு முன்பு மியா​சாகி மாமரக் கன்​றுகளை நட்​டார். இந்த மரக்​கன்​றுகள் தற்​போது நன்கு வளர்ந்து காய்த்து குலுங்​கு​கின்​றன.

சர்​வ​தேச சந்​தை​யில் ஒரு கிலோ மியா​சாகி மாம்​பழம் 1.5 இலட்​சம் ரூபா முதல் 3 இலட்​சம் ரூபா வரை விற்​பனை செய்​யப்​படு​கிறது.

இந்த மாம்​பழங்​களை வாங்க விவ​சாயி தேபா போடி​யாமிடம் இப்​போதே பலர் முன்​ப​திவு செய்​துள்​ளனர்.

விலை உயர்ந்த மாம்​பழம் என்​ப​தால் அவரது தோட்​டத்தை சுற்றி திருடர்​களின் நடமாட்​டம் அதி​கரித்து வரு​கிறது. இதனால் அவரும் அவரது குடும்​பத்​தினரும் 24 மணி நேர​மும் மியா​சாகி மாமரங்​களுக்கு காவல் காத்து வரு​கின்​றனர்.

இதுகுறித்து விவ​சாயி தேபாபோடி​யாமி கூறிய​தாவது: ஜப்​பானைச் சேர்ந்த மியா​சாகி மாமரங்​கள் இந்​திய மண்​ணில் வளர்​வது கடினம்.

மிகுந்த பராமரிப்பு காரண​மாக எனது தோட்​டத்​தில் இவற்றை வளர்த்து உள்​ளேன். தற்​போது எனது தோட்​டத்​தில் 17 மியா​சாகி மாமரங்​கள் உள்​ளன. இந்த மாமரங்​கள் காய்த்து குலுங்​கு​கின்​றன. ஒவ்​வொரு மாம்​பழ​மும் 350 கிராம் எடை​யில் உள்​ளன.

இவை கீழே விழுந்து சேதமடைந்து விடக்​கூ​டாது என்​ப​தற்​காக மரங்​களில் வலைகளை கட்டி வைத்​திருக்​கிறேன்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *