வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது

1 Min Read

வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் இலஞ்ச குற்றச்சாட்டு ஒன்றின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த அதிரடி கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சில சீன நாட்டவர்களின் பாஸ்போர்ட்டுகள் வெலிக்கடை பொலிஸாரின் பொறுப்பில் இருந்துள்ளன. அவற்றை மீண்டும் அவர்களிடம் ஒப்படைப்பதற்காக, சந்தேகநபரான பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சீனர்களிடம் இலஞ்சம் கோரியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவர் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் ரூ. 3 இலட்சம் பணத்தை லஞ்சமாகக் கோரியுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்துப் பெறப்பட்ட ரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசேட விசாரணைகளைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்துக் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *