குவாட் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு இன்று புதுடில்லியில்

1 Min Read

குவாட் அமைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு இன்று (26 ஆம் திகதி) புதுடில்லியில் நடைபெறுகிறது. இம்மாநாட்டின் நிமித்தம் இவ்வமைப்பில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நாங்கு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்குபற்றவிருக்கின்றனர்.

இந்தியாவுக்கு ஏற்கனவே விஜயம் செய்துள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ அவுஸ்திரேலிய, ஜப்பான், இந்திய ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் இம்மாநாட்டில் கலந்து கொள்வர் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.  2024 ஆம் ஆண்டுக்கு பின் குவாட் நாடுகள் அமைப்பின் தலைவர்கள் மாநாடு நடத்தப்படாததால் அவ்வமைப்பின் நிலைத்தன்மை குறித்த சந்தேகங்கள் அதிகரித்துள்ள சூழலில் இக்கூட்டம் நடத்தப்படுகிறது.

இக்கூட்டத்தின் போது அமெரிக்க ஜனாதிபதிக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையிலான உச்சி மாநாடு குறித்து இராஜாங்கச் செயலாளர் ரூபியோ,  தனது சகாக்களுக்கு விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தோ-பசுபிக் பகுதியை அமெரிக்கா கைவிடவில்லை என்பதை உறுதியளிப்பாக அமையும்.

உச்சி மாநாட்டின் மீளாய்வின் ஒரு பகுதியாக, தாய்வானுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்வது குறித்த சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராயப்படவுள்ளது.  மேலும் ரூபியோ தனது குவாட் சகாக்களிடமிருந்து தனிப்பட்ட ஆதரவைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தோ-பசுபிக் பிராந்தியத்தின் மாறிவரும் பாதுகாப்புச் சூழல், மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் மோதல், சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் பரஸ்பர அக்கறை கொண்ட பிற சர்வதேசப் பிரச்சினைகள் என்பன குறித்தும் இம்மாநாட்டின் போது கலந்துரையாடப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஏ.என்.ஐ

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *