வெப்ப அலையால் 16 பேர் மரணம்: நிவாரணம் அறிவித்த அரசு

0 Min Read

இந்திய மாநிலம் தெலங்கானாவில் வெப்ப அலையால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

உயிர்களை பறித்த வெப்ப அலை

தெலங்கானா மாநிலத்தில் கடுமையான வெப்ப அலை காரணமாக 16 பேர் உயிரிழந்ததாக, அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் தெரிவித்தார்.

16 killed in telangana for heat wave

ஜெயஷங்கர் பூபால்பள்ளி, வாரங்கல் அர்பன், கரீம்நகர், நிஜமாபாத், ஜோகுலாம்பா கட்வால், ரங்கா ரெட்டி, சூர்யாபேட் ஆகிய 7 மாவட்டங்களில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அவர் கூறினார்.

இந்நிலையில், தெலங்கானா அரசு உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

16 killed in telangana for heat wave

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *