1996 இல் 02 விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டமை

1 Min Read

கியூபாவிற்கும் புளோரிடாவிற்கும் இடையில் 1996 இல் இரண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கியூபாவின் முன்னாள் தலைவர் ரவுல் கஸ்ட்ரோ மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்கக் குடிமக்களைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியமை உள்ளிட்ட பிற குற்றங்களுக்கு அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

‘பிரதர்ஸ் டு தி ரெஸ்க்யூ’ என்ற கியூப-அமெரிக்கக் குழுவிற்குச் சொந்தமான விமானத்தைச் சுட்டு வீழ்த்தி, மூன்று அமெரிக்கர்கள் உட்பட நான்கு பேரைக் கொன்றதாக காஸ்ட்ரோ மற்றும் மேலும் ஐந்து பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.தற்போது 94 வயதாகும் காஸ்ட்ரோ, அப்போது நாட்டின் ஆயுதப் படைகளின் தலைவராக இருந்தார். கியூபாவின் கம்யூனிச ஆட்சி மீது அமெரிக்கா தனது அழுத்தத்தை அதிகரித்து வரும் நிலையில், ஜனாதிபதி மிகுவல் தியாஸ்-கானெல் இக்குற்றச்சாட்டுகளை எந்தவொரு சட்ட அடிப்படையுமற்ற ஒரு அரசியல் சூழ்ச்சி என்றுள்ளார்.கியூபாவின் ஒற்றைக் கட்சி ஆட்சியில் குறிப்பிடத்தக்க அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களைச் செய்யுமாறு அமெரிக்கா கடுமையான அழுத்தத்தை மேற்கொள்ளும் நிலையில், நீதித்துறையின் இந்த புதிய குற்றச்சாட்டுகள், கியூபாவின் கம்யூனிஸ்ட் தலைமையின் ஒரு முக்கியத் தலைவரைக் குறிவைக்கின்றன.பி.பி.சி

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *