இந்திய, ஆப்கானுடன் இலங்கை ஏ முக்கோண தொடரில் பலப்பரீட்சை

1 Min Read

இலங்கை, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகள் பங்கேற்கும் முக்கோண ஒருநாள் தொடர் ஒன்று அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் ஜூன் 9 ஆம் திகதி ஆரம்பமாகும் இந்தத் தொடரின் ஆரம்ப சுற்றில் ஓர் அணி மற்ற அணியுடன் தலா இருமுறை மோதவுள்ளது. இதன்படி இலங்கை ஏ அணி தனது முதல் போட்டியில் ஜூன் 9 இல் இந்திய ஏ அணியுடன் ஆடும். தொடர்ந்து ஜூன் 11 இல் ஆப்கானிஸ்தான் ஏ அணியை எதிர்கொள்ளம் இலங்கை ஏ ஜூன் 15 மற்றும் 19 ஆம் திகதிகளில் முறையே இந்தியா மற்றும் ஆப்கான் ஏ அணிகளை மீண்டும் எதிர்கொள்ளவுள்ளது.

இறுதிப் போட்டி ஜூன் 21 ஆம் திகதி நடைபெறும். அனைத்து ஆட்டங்களும் தம்புள்ளையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த முக்கோணத் தொடர் முடிவுற்ற பின் இந்திய ஏ அணி தொடர்ந்தும் இலங்கையில் தங்கி இருந்து இலங்கை ஏ அணியுடன் இரு நான்கு நாள் போட்டிகளில் ஆடவுள்ளது. இதன் முதல் போட்டி ஜூன் 25 ஆம் திகதி ஆரம்பமாகவிருப்பதோடு இரண்டாவது ஆட்டம் ஜூலை 2 தொடக்கம் 5 வரை நடைபெறும். இந்த இரு போட்டிகளும் காலியில் நடைபெறவுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *