எலி காய்ச்சல், புற்றுநோய் சிகிச்சைக்கு ரூ. 50 மில்லியன் பெறுமதியான இயந்திரங்கள் நன்கொடை!

1 Min Read

இலங்கையின் சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக, இரத்தப் பிளாஸ்மாவை மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் (Com.Tec MultiProcedural Machine) 2 அதிநவீன இயந்திரங்கள் ‘பிரிமியம் இன்டர்நேஷனல்’ (Premium International) தனியார் நிறுவனத்தினால் சுகாதார அமைச்சுக்கு அண்மையில் நன்கொடையாக வழங்கப்பட்டன.

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம், பிரிமியம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பணிப்பாளர் மஹேஷ் பெர்னாண்டோ மற்றும் பொது மேலாளர் அசல மோசஸ் ஆகியோரால் இந்த இயந்திரங்கள் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.

இந்த அதிநவீன மருத்துவ உபகரணங்கள் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டவையாகும்.

இந்த இயந்திரங்களின் மூலம் ‘பிளாஸ்மாபெரிசிஸ்’ (Plasmapheresis) எனப்படும் பிளாஸ்மா பரிமாற்ற சிகிச்சை முறையை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும்.

இலங்கையின் சுகாதாரத் துறையின் வளர்ச்சிக்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்குவதே நிறுவனத்தின் முக்கிய நோக்கம் என அதன் பணிப்பாளர் மஹேஷ் பெர்னாண்டோ தெரிவித்தார். மேலும், இந்த இயந்திரங்களின் உத்தியோகபூர்வ விநியோகஸ்தர் என்ற ரீதியில் தொடர்ச்சியான பராமரிப்பு சேவைகளை வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் இலவச சுகாதாரச் சேவையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல அரசாங்கம் ஆண்டுதோறும் பெருந்தொகை நிதியை மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்காகச் செலவிடுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் அரசாங்கத்தின் முயற்சிகளுக்குப் பலம் சேர்க்கும் வகையில் இந்த நன்கொடையை வழங்கிய நிறுவனத்திற்கு அவர் தனது நன்றியையும் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *