மூடப்பட்ட கட்டடம் ஒன்றின் பின்புறமான, மர்மமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடல எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
சடலம் மிகவும் சிதைந்து என்புக்கூடுகள் உள்ளிட்ட சில பகுதிகள் மாத்திரம் எஞ்சியிருந்ததாகவும், அது பல நாட்களுக்கு முன்பு உயிரிழந்த ஒருவருடையதாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கொஸ்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, காலி வீதி, மகா இந்துருவ ஹபக்கல பகுதியிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திலான மரண விசாரணையை பலபிட்டிய பதில் நீதிபதி லால் சாந்த முன்னெடுத்திருந்தார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக பலபிட்டிய ஆதார மருத்துவமனையில் உள்ள சட்ட வைத்திய நிபுணரிடம் ஒப்படைக்கப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறந்த நபர் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பதோடு. இது தொடர்பாக கொஸ்கொட பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



