இலங்கை மகளிர் ஏ அணிக்கு சந்தீபனி தலைவியாக தெரிவு

1 Min Read

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து மகளிர் ஏ அணிக்கு எதிரான இலங்கை ஏ ஒருநாள் அணியின் தலைவியாக சத்யா சந்தீபனி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை ஏ அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ஆடுவதற்காகவே நியூசிலாந்து மகளிர் ஏ அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இலங்கை மற்றும் நியூசிலாந்து மகளிர் ஏ அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் இன்று (12) ஆரம்பமாகவுள்ளது. இந்தத் தொடரின் அடுத்த இரு ஒருநாள் போட்டிகளும் எதிர்வரும் மே 15 மற்றும் 18 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. அனைத்துப் போட்டிகளும் ரங்கிரி தம்புள்ளை சர்வதேச மைதான்தில் பகல் ஆட்டபமாக காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும்.

இந்தப் போட்டிகளுக்கான இலங்கை மகளிர் ஏ அணி நேற்று அறிக்கப்பட்டது. 15 பேர் கொண்ட இந்தக் குழாத்தில் 26 வயது சகலதுறை வீராங்கனை சந்தீபனி அணித் தலைவியாக செயற்படவுள்ளார்.

இலங்கை மகளிர் ஏ குழாம்: சத்யா சந்தீபனி (தலைவி), சஞ்சனா காவிந்தி, விஷ்மி குணரத்ன, விமொக்ஷா பாலசூரிய, லிஹினி அப்சரா, லிமன்சா திலகரத்ன, தெவ்மி விஹங்கா, சுமுது நிசன்சலா, ரஷ்மிகா செவ்வந்தி, பியுமி வத்சலா, ரந்தி பிரேமரத்ன, சதீஷ்குமார் சஜிந்தினி, ரஷ்மி சில்வா, சமுதி பிரபோதா, தருகா செஹானி.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *