ஈஸ்டன் வொறியஸ் வெற்றி

1 Min Read

அட்டாளைச்சேனை அல்-நஜா விளையாட்டு கழகத்தின் 24 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற மர்ஹும் எச்.எம். செயினுலாப்தீன் ஞாபகார்த்த மின்னொளி கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் ஒலுவில் ஈஸ்டன் வொறியஸ் அணி சம்பியனாகியது.

அட்டாளைச்சேனை நியூ ஸ்டார் மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை (07) நடைபெற்ற இறுதிப் போட்டியில் அட்டாளைச்சேனை சோபர் அணி நிர்ணயித்த 36 ஓட்ட இலக்கை இலகுவாக எட்டிய ஈஸ்டன் வொறியஸ் 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

சம்பியனான ஒலுவில் ஈஸ்டன் வொறியஸ் அணிக்கு வெற்றிக் கிண்ணத்துடன் 60 ஆயிரம் ரூபா பணப்பரிசை சமூக செயற்பாட்டாளர் ஜே.எம். றிஸ்வி வழங்கினார். இரண்டாமிடம் பெற்ற சோபர் அணிக்கு கிண்ணத்துடன் 30 ஆயிரம் ரூபா பணப்பரிசை அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் வழங்கி வைத்தார்.

இறுதிப் போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீரராகவும், தொடரின் சிறந்த வீரராகவும் ஈஸ்டன் வொறியஸ் அணியின் சஜாத் தெரிவு செய்யப்பட்டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *