அட்லடிகோ மெட்ரிட் அணிக்கு எதிராக 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டிய ஆர்சனல் அணி 20 ஆண்டுகளில் முதல் முறையாக சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
எமிரேட்ஸ் அரங்கில் நேற்று முன்தினம் (05) நடைபெற்ற இரண்டாம் கட்ட அரையிறுதியில் முதல் பாதியின் கடைசி நேரத்தில் புகாயோ சாகா புகுத்திய கோல் மூலமே ஆர்சனல் வெற்றியை உறுதி செய்தது. கடந்த வாரம் மெட்ரிட்டில் நடைபெற்ற முதல் கட்ட அரையிறுதிப் போட்டி 1–1 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றதாலேயே ஆர்சனல் 2–1 என்ற மொத்த கோல் அடிப்படையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இதன்படி புடபாஸ்டில் எதிர்வரும் மே 30 ஆம் திகதி நடைபெறவுள்ள சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் ஆசனல் அணி பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அல்லது பெயர்ன் முனிச் அணியை எதிர்கொள்ளவிருந்தது.
ஆசனல் அணி இதற்கு முன்னர் 2006 ஆம் ஆண்டு ஒரே ஒரு முறை சம்பியன்ஸ் வீக் இறுதிப் போட்டிக்கு முன்னேறியபோதும் அந்தப் போட்டியில் பார்சிலோனாவிடம் தோல்வியை சந்தித்து.



