ஒரு வகை காய்ச்சல் பரவல்; தெனியாய வலயத்தின் 4 பாடசாலைகளுக்கு பூட்டு!

1 Min Read

ஒரு வகை காய்ச்சல் பரவி வருவதால், தெனியாய கல்வி வலயத்தில் உள்ள நான்கு பாடசாலைகள் நாளை (08) மூடப்பட்டிருக்கும் என்று தெனியாய வலய கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில், நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெனியாய வலயக் கல்விப் பணிப்பாளர் நிஷாக ஹெட்டிகொட தெரிவித்தார்.

இன்றையதினமும் (07) குறித்த பாடசாலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, தெனியாய மத்திய கல்லூரி, தெனியாய ராஜபக்ஷ மகா வித்தியாலயம், தெனியாய புனித மெத்தியூ இருமொழி மகா வித்தியாலயம், பல்லேகம சித்தார்த்த வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் இவ்வாறு மூடப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட பாடசாலைகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே நோய் பரவல் அதிகரித்ததைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும், தங்கள் பிள்ளைகளுக்கு இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அனுப்புமாறும் சுகாதார அதிகாரிகள் பெற்றோர்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *