றம்புக்கனை முதல் கடிகமுவ வரையான புகையிரதப் பாதையில் பயணம் மீண்டும் ஆரம்பம்

1 Min Read

புகையிரதத் திணைக்கள ஊழியர்கள் மற்றும் தொண்டர்களின் பெரும் முயற்சியினால், பாரிய நிலச்சரிவுகளுக்கு மத்தியிலும் றம்புக்கனை முதல் கடிகமுவ வரையான புகையிரதப் பாதை முதற்கட்டமாகச் சீரமைக்கப்பட்டுள்ளது.

5 இடங்களில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவுகள் சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று (03) றம்புக்கனை முதல் கடிகமுவ வரை முதலாவது சேவை ரயில் இயக்கப்பட்டது.

இந்தப் பாதையில் மொத்தம் 97 இடங்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 92 இடங்களில் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

கடுகண்ணாவை வரையான பாதையில் இன்னும் 5 பிரதான இடங்களில் சீரமைப்புப் பணிகள் எஞ்சியுள்ளன. குறிப்பாக உலக்கொட்டை (Ulakotte) பகுதியில் மூழ்கியுள்ள இடத்தை சீரமைக்கத் தேவையான பொருட்களைக் கொண்டு செல்ல புகையிரதப் பாதையைத் தவிர வேறு வழிகள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து வசதிகள் அற்ற இடங்களுக்கு லொறிகள் மூலம் பொருட்களைக் கொண்டு சென்றும், மனித வலுவைப் பயன்படுத்தியும் ஊழியர்கள் இந்தப் பாரிய பணியைச் செய்துள்ளனர்.

ஒவ்வொரு இடமாகச் சீரமைப்பதன் மூலமே அடுத்த கட்டத்திற்கு நகர முடிவதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் டிசம்பர் இறுதிக்குள் (2026) கண்டி வரையான புகையிரதச் சேவைகளை முழுமையாக மீள ஆரம்பிக்க முடியும் என புகையிரத பொது ஊழியர் சங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *