நிதியமைச்சரான ஜனாதிபதி பாராளுமன்றில் நாளை உரை

1 Min Read

அவுஸ்திரேலிய கடன் வழங்குநருக்கு திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மூன்றாம் தரப்பினரால் மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் நிதியமைச்சரான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை செவ்வாய்க்கிழமை (05) பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார்.

2025 செப்டெம்பர் மாதம் முதல் டிசெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் திறைசேரியால் செலுத்தப்பட்ட 10 கொடுப்பனவுகளின் மொத்த தொகையான 2.5 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் முன்னிலையான திறைசேரியின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும பல விடயங்களை வெளிப்படுத்தினார்.இந்த மோசடி தொடர்பில் நிறுவன மட்டத்தில் உள்ளக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஊடாகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திறைசேரியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றம் நாளை கூடவுள்ள நிலையில், இந்த நிதி மோசடி விவகாரம் தொடர்பில் நிதி அமைச்சரான,ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விசேட உரையாற்றவுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *