தங்கம் வென்ற நிபுணி வாசனா நாடு திரும்பினார்

1 Min Read

சீனாவில் நடைபெற்ற 6ஆவது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் மல்யுத்தப் போட்டியில் பங்குபற்றி தங்கப் பதக்கம் வென்று இலங்கைக்குப் பெருமை சேர்த்த இலங்கை விமானப்படை மல்யுத்த வீராங்கனை நிபுணி வாசனா தர்மதாசவும் அவரது அணியினரும் நேற்று (01) இலங்கை வந்தடைந்தனர்.

50 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட அவர், இறுதிப் போட்டியில் வியட்நாம் வீராங்கனையைத் தோற்கடித்து இந்த முக்கிய வெற்றியைப் பதிவு செய்தார்.

2026 ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை வென்ற முதல் தங்கப்பதக்கம் இதுவாகும்.May be an image of one or more people, dais and text

May be an image of ‎one or more people, ambulance, hospital and ‎text that says "‎WELCOME το SRILANK 총자분그 NOTELS کل+ SRILANKA AIRFORCE AIR FORCE‎"‎‎

இலங்கை வந்தடைந்த குழுவினரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமானப்படை மல்யுத்த அணியின் தலைவர் குறூப் கெப்டன் நலின் வெவகும்புர, செயலாளர் விங் கமாண்டர் விராஜ் கமகே, பயிற்சியாளர், முகாமையாளர், மல்யுத்த அணியின் வீரர்கள் குழுவினர் வரவேற்றனர்.

மல்யுத்தத்தில் சர்வதேச தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்த விமானப்படை வீராங்கனை நிபுணி வாசனாவின் இந்தச் சாதனை, வரவிருக்கும் சர்வதேசப் போட்டிகளுக்குப் பெரும் ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.No photo description available.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *