– ரூ. 70 மில்லியன் மோசடி குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு, இன்று (ஏப்ரல் 23) கொழும்பு மேல் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபரனா சுவந்துருகொட முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
பிரதிவாதியான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.
வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக, இதனை எதிர்வரும் மே மாதம் 29 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இலங்கையில் ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதாகக் கூறி, இந்தியாவின் கிரிஷ் நிறுவனத்திடமிருந்து ரூ. 70 மில்லியன் பெற்று அதனைத் தனிப்பட்ட தேவைக்காகப் பயன்படுத்தியதன் மூலம் “நம்பிக்கை மோசடி” செய்ததாக நாமல் ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நிதிச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரினால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



