இன்னும் சில நாட்கள் மட்டுமே…. உலகம் ஸ்தம்பிக்கும்: எச்சரிக்கை விடுத்த பேராசிரியர்

2 Min Read

ஈரானால் ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க இராணுவம் ஈரான் கடற்பகுதியில் முற்றுகையை முன்னெடுத்து வருவதையடுத்து சிகாகோ போராசிரியர் ஒருவர் உலக நாடுகளுக்கு பெரும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தட்டுப்பாடு ஏற்படும்

சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியரும், பாதுகாப்பு விவகாரங்களில் நிபுணருமான ராபர்ட் ஏ பேப், ஹார்முஸ் நீரிணை முடக்கம் மற்றும் அமெரிக்க இராணுவத்தின் முற்றுகையால், இன்னும் சில நாட்களுக்குள் முக்கியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலைக்கு செல்லும் என கணித்துள்ளார்.

இன்னும் சில நாட்கள் மட்டுமே.... உலகம் ஸ்தம்பிக்கும்: எச்சரிக்கை விடுத்த பேராசிரியர் | Blockade Triggers Global Supply

அமெரிக்கா அறிவித்துள்ள ஹார்முஸ் வழித்தட முற்றுகை என்பது வெறும் விலை அதிர்ச்சி அல்ல. இது உலக அளவில் பொருட்கள் விநியோக அமைப்பு முழுவதையும் பாதிக்கும் ஆரம்பக் கட்ட சப்ளை ஷாக் என்று விளக்கமளித்துள்ளார்.

முதலில் விலை உயர்வு, 2வது கட்டமாக பொருட்களின் இருப்பு அளவிலான பற்றாக்குறை, 3வதாக பொருளாதார சரிவு என்ற வரிசையில், நாம் தற்போது இரண்டாவது கட்டத்தில் இருக்கிறோம் எனவும் ராபர்ட் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கட்டத்தில் தான் பொருளாதார அமைப்பு உடையத் தொடங்கும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொருட்களின் விலை உயரும் போதே, வரி, செஸ், நாணய மதிப்பு உள்ளிட்டவையை முறைப்படுத்த முடியும்.

ஆனால் பொருட்களின் விநியோகம் குறைந்துவிட்டால் பணம் இருந்தாலும் வாங்க முடியாது. இதனால் பெரும் நெருக்கடி உருவாகும், பொருளாதார வளர்ச்சிக்கும் இயக்கத்திற்கும் முக்கியமாக இருக்கும் கச்சா எண்ணெய் வரத்து முடங்கினால் பொருளாதாரம் உடையும்.

இன்னும் சில நாட்களில்

உலக அளவில் உற்பத்தியாகும் எண்ணெயில் சுமார் 20 சதவீதம் ஹார்முஸ் வழியாகத்தான் செல்கிறது. தற்போது ஈரானும் அமெரிக்காவும் இந்தப் பாதையை முடக்கியுள்ள நிலையில், விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் மட்டுமல்ல, எரிபொருள், உரம், பிளாஸ்டிக் உள்ளிட்ட நவீன உற்பத்தியின் அடிப்படைப் பொருட்கள் அனைத்தும் பாதிக்கப்படும். இந்த பொருட்களின் இருப்புகள் குறையத் தொடங்கியவுடன், விலை உயர்வு பிரச்சனையைத் தாண்டி… பொருட்கள் பற்றாக்குறை பிரச்சனையாக மாறிவிடும் என்று ராபர்ட் எச்சரிக்கிறார்.

இன்னும் சில நாட்கள் மட்டுமே.... உலகம் ஸ்தம்பிக்கும்: எச்சரிக்கை விடுத்த பேராசிரியர் | Blockade Triggers Global Supply

1973-ம் ஆண்டு உலக எண்ணெய் விநியோகத்தில் 7 சதவீதம் மட்டுமே பாதிக்கப்பட்டபோது, 90 நாட்களுக்குள் பற்றாக்குறை, மக்களுக்கு இருப்பில் இருக்கும் பொருட்களை பகிர்ந்து அளிப்பது, தொழில்துறை இயக்கம் முடக்கம் ஆகியவை ஏற்பட்டன.

ஏற்கெனவே 50 நாட்களை நாம் கடந்துவிட்டோம். இன்னும் சில நாட்களில் பெரும் நெருக்கடி வரும் என ராபர்ட் தனது ஆய்வறிக்கையில் எச்சரிக்கிறார்.

ஆசியா முதலில் பாதிக்கப்படும். பின்னர் ஐரோப்பா. இறுதியில் உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும். ஆசியா, ஐரோப்பா முடங்கினால் அமெரிக்காவும் தப்பாது என்று ராபர்ட் பேப் விளக்குகிறார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *