ஜோதிட ரீதியில் நவகிரங்களின் பெயர்ச்சிக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது.அந்தவகையில், இன்று 19 ஆம் திகதி அழகு, காதல் மற்றும் ஆடம்பரதின் கிரகமாகவும், அசுர குருவாகவும் திகழும் சுக்கிர பகவான் தனது சொந்த ராசியான ரிஷபத்துக்கு இடப்பெயர்ச்சி அடைகின்றார்.
குறித்த சுக்கிரன் பெயர்ச்சியால் ‘மாளவ்ய யோகம்’ என்ற வலிமையான யோகமும் உருவாகியுள்ளது. அதன் தாக்கமானது 12 ராசிகளிலும் பிரதிபலித்தாலும் அதிகளில் அதிர்ஷ்ட பலன்களை பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

அதிஷ்டம் பெரும் 3 ராசிகள்
ரிஷபம் – இந்த கிரகப் பெயர்ச்சியானது ரிஷப ராசியிலேயே நிகழ்வதால், அவர்களின் வாழ்வில் பல்வேறு வகையிலும் சாதக பலன்கள் கிடைக்கப்போகின்றது.
குறிப்பாக இவர்களின் தொழில் வாழ்க்கையில் அமோக முன்னேற்றம் உண்டாகும்.நீண்ட நாள் இருந்த கடன் தொல்லைகளுக்கு முடிவு கட்டும் வாய்ப்பு உருவாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
கடகம் – கடக ராசிக்காரர்களுக்கு இந்த கிரகப் பெயர்ச்சி பொருளாதார ரீதியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்ப்போகின்றது. வெளிநாட்டு நண்பர்களிடமிருந்து பணவுதவி கிடைக்க வாய்ப்புள்ளது.
புதிய தொழில் ஆரம்பிக்க வேண்டும் என நீண்ட காலமாக போராடியவர்களுக்கு இந்த காலகட்டம் அதற்கான வாய்ப்புகளை தனாகவே உருவாக்கிக்கொடுக்கும்.
விருச்சிகம் – விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிரன் பெயர்ச்சி வாழ்வில் அதிர்ஷ்ட கதவுகளை திறக்கப்போகின்றது. இவர்ளுக்கு இந்த காலகட்டம் தொட்டதெல்லாம் துலங்கும் பெற்காமாக இருக்கும்.
பணியிடத்தில் சக ஊழியர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுப்பாடுகள் நீங்கி சுமூகமான சூழல் உருவாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் அதிகாரம் மிக்க பதவியில் அரும் வாய்ப்பு கிட்டும்.



