நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு

1 Min Read

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மார்ச் 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி, கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடைபெறுகிறது.

இந்த ஆண்டு நீட் தேர்வு மே 3ஆம் திகதி நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு பிப்ரவரி 8ஆம் திகதி தொடங்கியது.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு | Neet Exam Application Deadline Extended

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி நேற்றுடன் முடிவடைய இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

சர்வர் அடிக்கடி முடங்கியதால் பல மாணவர்கள் விண்ணப்பத்தை பதிவேற்ற முடியவில்லை என்று புகார் தெரிவித்தனர்.

மேலும், இணையதளம் மிகவும் மெதுவாக செயல்பட்டதால் விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாணவர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, விண்ணப்பிக்க வேண்டிய கால அவகாசம் மார்ச் 11ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *