இலங்கையில் பல லட்சம் மதிப்பிலான உணவு பொருட்கள் அழிப்பு: சுகாதார அதிகாரிகள் அதிரடி

1 Min Read

இலங்கையின் மன்னாரில் பல லட்சம் மதிப்பிலான உணவு பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன.

காலாவதியான உணவு பொருட்கள் அழிப்பு

இலங்கையின் மன்னார் பகுதியில் பொது சுகாதார வைத்திய அதிகாரி சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத வர்த்தக நிலையம் ஒன்றின் மீது அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேட் மற்றும் நகரசபை சுகாதார பரிசோதகர்கள் இணைந்து நடத்திய சோதனையில், காலாவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்தியது, அழுகிய மரக்கறி பழங்கள் காட்சிப்படுத்தியது, உணவு பொருட்களை உரிய வகையில் களஞ்சியப்படுத்தாமல் இருந்து ஆகிய குற்றச்சாட்டின் கீழ்  வர்த்தக நிலையம் ஒன்றின் மீது அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் பல லட்சம் மதிப்பிலான உணவு பொருட்கள் அழிப்பு: சுகாதார அதிகாரிகள் அதிரடி | Mannar Health Officials Destroyed Expired Food

இந்த சோதனையின் போது கைப்பற்ற உணவு பொருட்கள் அழிக்கவும், 1 லட்சம் ரூபா அபராதமும் விதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவின் படி, அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட காலாவதியான உணவு பொருட்களை மீண்டும் பயன்படுத்த முடியாத வகையில் அழித்துள்ளனர்.

பொது சுகாதார அதிகாரிகளின் மேல் குறிப்பிட்ட நடவடிக்கையின் கீழ் மொத்தமாக 13 லட்சம் ரூபா மதிப்பிலான உணவு பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் பல லட்சம் மதிப்பிலான உணவு பொருட்கள் அழிப்பு: சுகாதார அதிகாரிகள் அதிரடி | Mannar Health Officials Destroyed Expired Food

மேலும் இது போன்ற சுகாதார ஆய்வு நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *