அசாமில் Su-30MKI போர் விமானம் விபத்துக்குள்ளானதில், 2 இந்திய விமான படையினர் உயிரிழந்துள்ளனர்.
இந்திய போர் விமானம் விபத்து
இந்திய விமானப்படைகக்கு சொந்தமான Su-30 MKI போர் விமானம், அசாமின் கர்பி அங்லாங் மாவட்டத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது நேற்று மாலை ரேடாரில் இருந்து மாயமானது.

இரவு 7:42 மணிக்கு விமானத்தில் இருந்து தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், ஜோர்ஹாட் விமானப்படை தளத்தில் இருந்து 60 கிமீ தொலைவில் விபத்திற்குள்ளாகியுள்ளது.
அந்த பகுதியில் வசிப்பவர்கள் அருகிலுள்ள காட்டுப்பகுதியில் பெரும் சத்தம் கேட்டதாக தெரிவித்தனர்.
விபத்தில், அணித்தலைவர் அனுஜ் மற்றும் ஃப்ளிட் லெப்டினன்ட் பூர்வேஷ் துராக்கர் உயிரிழந்ததை இந்திய விமானப்படை(IAF) உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு IAF இரங்கல் தெரிவித்துள்ளது.
Su-30MKI என்பது ரஷ்யாவை சேர்ந்த சுகோய் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 2 இருக்கைகள் கொண்ட, பல்பணி சார்ந்த நீண்ட தூர போர் விமானமாகும்.
இது தற்போது இந்திய விமானப்படைக்காக (IAF) HAL உரிமத்தின் கீழ் தயாரிக்கப்படுகிறது. இந்திய விமானப்படையில், 260க்கும் மேற்பட்ட Su-30MKI விமானங்கள் உள்ளது.
ஜூன் 2024 ஆம் ஆண்டில் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் ஒரு சுகோய் போர் விமானம் விபத்துக்குள்ளானது. ஜனவரி 2023 ஆம் ஆண்டில் மற்றொரு சுகோய்-30 விமானம் குவாலியர் விமான தளத்தில் இருந்து புறப்பட்ட பிறகு விபத்துக்குள்ளானது.




