உலகிலேயே சைவ உணவு அதிகம் சாப்பிடுபவர்கள் வாழ்கின்ற நாடு.., எது தெரியுமா?

1 Min Read

உலக மக்கள் தொகை ஆய்வு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின் படி, உலகம் முழுவதும் சைவ உணவுப் பழக்கம் அதிகரித்து வருகிறது.

சைவ உணவு என்பது காய்கறி, பழம், தானியங்கள் மற்றும் பருப்புகளை அடிப்படையாகக் கொண்ட உணவுமுறை.

உடல்நலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விலங்கு நலன் மற்றும் மத- பண்பாட்டு காரணங்கள் இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.

உலகிலேயே சைவ உணவு அதிகம் சாப்பிடுபவர்கள் வாழ்கின்ற நாடு.., எது தெரியுமா? | Country Has The Most Vegetarians In The World

ஆரோக்கியமான மற்றும் இயற்கையான வாழ்க்கைக்கு சைவ உணவு ஒரு நல்ல தேர்வு சொல்லப்படுகிறது.

அந்தவகையில், சைவ உணவாளர்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவில் 29.5 சதவீதம் மக்கள் முழுமையான சைவ உணவாளர்களாக உள்ளனர்.

உலகிலேயே சைவ உணவு அதிகம் சாப்பிடுபவர்கள் வாழ்கின்ற நாடு.., எது தெரியுமா? | Country Has The Most Vegetarians In The World

மத மற்றும் பாரம்பரிய காரணங்களால் இந்தியாவில் சைவ உணவு பழக்கம் தலைமுறைகளாக தொடர்ந்து வருகிறது.

இரண்டாவது இடத்தில் மெக்ஸிகோ உள்ளது. அங்கு 19 சதவீதம் மக்கள் சைவ உணவுப் பழக்கத்தை பின்பற்றுகின்றனர்.

மூன்றாவது இடத்தில் பிரேசில் உள்ளது. அந்நாட்டில் 14 சதவீதம் மக்கள் சைவ உணவாளர்களாக உள்ளனர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *