தீவிரமடையும் ஈரான் விவகாரம்… எச்சரிக்கை விடுக்கும் உலகின் பல நாடுகள்

2 Min Read

மத்திய கிழக்கின் சில பகுதிகளிலிருந்து தூதரகப் பணியாளர்களின் குடும்பத்தினர் மற்றும் அத்தியாவசியமற்ற ஊழியர்களை பல நாடுகள் திரும்பப் பெறத் தொடங்கியுள்ளன.

பாதுகாப்பு நிலைமை

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் தீவிரமடைந்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், ஈரானுக்கு பயணம் செய்வதை ஒத்திவைக்க பல நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.

தீவிரமடையும் ஈரான் விவகாரம்... எச்சரிக்கை விடுக்கும் உலகின் பல நாடுகள் | Iran Tensions Rise Countries Issue

 

இஸ்ரேல் மற்றும் லெபனானில் உள்ள அவுஸ்திரேலிய தூதர்களின் குடும்பங்கள், பிராந்தியத்தில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமையைக் காரணம் காட்டி, இரு நாடுகளையும் விட்டு வெளியேறுமாறு அவுஸ்திரேலிய அரசாங்கம் கூறியுள்ளது.

அத்துடன், ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான் மற்றும் கத்தாரில் உள்ள அவுஸ்திரேலிய தூதர்களின் குடும்பத்தினரும் தாமாகவே முன்வந்து நாடு திரும்பவும் கோரியுள்ளது.

மேலும், வணிக ரீதியான வாய்ப்புகள் இருக்கும் வரை, இஸ்ரேல் மற்றும் லெபனானில் உள்ள குடிமக்கள் வெளியேறுவதைப் பற்றி பரிசீலிக்குமாறும் அவுஸ்திரேலியா அரசாங்கம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

இதனிடையே, அதிகரித்து வரும் பதட்டங்கள் மற்றும் பாதுகாப்பு நிலைமை மோசமடையும் அபாயம் காரணமாக, ஈரானில் உள்ள தனது நாட்டினரை விரைவில் வெளியேறுமாறு செர்பியா கூறியுள்ளது.

மட்டுமின்றி, போலந்து குடிமக்கள் உடனடியாக ஈரானை விட்டு வெளியேற வேண்டும் என்று அந்த நாட்டின் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஈரான் பதட்டங்களுக்கு மத்தியில், லெபனானில் உள்ள அதன் தூதரகத்திலிருந்து அத்தியாவசியமற்ற ஊழியர்கள் மற்றும் தகுதியான குடும்ப உறுப்பினர்களை அமெரிக்கா வெளியேற்றி வருகிறது.

தீவிரமடையும் ஈரான் விவகாரம்... எச்சரிக்கை விடுக்கும் உலகின் பல நாடுகள் | Iran Tensions Rise Countries Issue

உதவியை எதிர்பார்க்கக்கூடாது

ஜனவரி 12ம் திகதியில் இருந்தே ஈரானை விட்டு வெளியேறுமாறு ஸ்வீடன் வெளிவிவகார அமைச்சகம் தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியது. அத்துடன் ஈரானுக்குப் பயணம் செய்வதை தவிர்க்கவும் கோரியுள்ளது.

மேலும், அரசாங்கத்தின் வலியுறுத்தலை மீறி, தங்க முடிவு செய்த மக்கள் அரசாங்கத்திடமிருந்து உதவியை எதிர்பார்க்கக்கூடாது என்றும் வெளிவிவகார அமைச்சர் பிப்ரவரியில் கூறியுள்ளார்.

தீவிரமடையும் ஈரான் விவகாரம்... எச்சரிக்கை விடுக்கும் உலகின் பல நாடுகள் | Iran Tensions Rise Countries Issue

இதனிடையே, ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம், தற்போது ஈரானில் உள்ள குடிமக்கள் வணிக விமானங்கள் உட்பட கிடைக்கக்கூடிய போக்குவரத்து வழிகள் மூலம் வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது.

ஸ்வீடன் போலவே ஜனவரி 13 ஆம் திகதி சைப்ரஸ் அரசாங்கமும் ஈரானுக்குச் செல்லும் அனைத்துப் பயணங்களையும் தவிர்த்து, குடிமக்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியது.

ஈரானுக்குச் செல்லும் அனைத்துப் பயணங்களையும் தொடர்ந்து ஒத்திவைக்குமாறு சிங்கப்பூர் தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *