டெல்லியில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம் – உளவுத்துறை எச்சரிக்கை

1 Min Read

டெல்லியில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதை உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெல்லியில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்?

கடந்த ஆண்டு நவம்பர் 10 ஆம் திகதி, டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் குண்டு வெடிப்பில் 15 பேர் உயிரிழந்தனர்.

டெல்லியில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம் - உளவுத்துறை எச்சரிக்கை | Pak Based Let Planning Attack Red Fort In Delhi

இந்நிலையில், டெல்லியில் மீண்டும் தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை வெளியான நிலையில் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம் - உளவுத்துறை எச்சரிக்கை | Pak Based Let Planning Attack Red Fort In Delhi

செங்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் சாந்தினி சவுக்கில் உள்ள முக்கிய மதத் தலங்கள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பாவின் (LeT) கண்காணிப்பில் இருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.

உளவுத்துறை எச்சரிக்கை

பிப்ரவரி 6 ஆம் திகதி பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடந்த மசூதி குண்டுவெடிப்புக்கு பழிவாங்க இந்தியாவில் ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதலை நடத்த பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பா(LeT) திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.

மேம்பட்ட வெடிக்கும் சாதனம் (IED) தாக்குதலைத் திட்டமிடக்கூடும் எனவும், டெல்லி சாந்தினி சவுக் பகுதியில் உள்ள ஒரு கோயில் ஒரு சாத்தியமான இலக்காக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

டெல்லியில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம் - உளவுத்துறை எச்சரிக்கை | Pak Based Let Planning Attack Red Fort In Delhi

மேலும், நாட்டில் உள்ள முக்கிய கோவில்களை லஷ்கர் இ தொய்பா குறிவைக்கலாம் என்றும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.

லஷ்கர் இ தொய்பா மற்றொரு பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமதுவுடன் இணைந்து, “ஜுல்ம் கா பத்லா”(Zulm Ka Badla) என்ற கூட்டுத் திட்டத்தின் கீழ் ராவல்பிண்டியில் உள்ளவர்களின் மேற்பார்வையில் இந்த திட்டமிடல் நடைபெற்று வருகிறது.

வங்கதேச மற்றும் நேபாளம் எல்லைகளின் ஊடுருவல் வழிகள் பயன்படுத்தப்படுவதாகவும், போலி அடையாளங்களுடன் ஊடுருவி தொழிலாளர்கள் அல்லது தெரு வியாபாரிகளாக கலப்பதாகவும் கூறப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *