காதலர் தினத்திற்கு 6 கோடி ரோஜா மலர்கள்: பெங்களூரு விமான நிலையம் படைத்துள்ள சாதனை

1 Min Read

காதலர் தினத்தை முன்னிட்டு பெங்களூரு சர்வதேச விமான நிலையம் புதிய ரோஜா புரட்சி ஒன்றை செய்து காட்டியுள்ளது.

BLR விமான நிலையத்தின் ரோஜா புரட்சி

காதலர் தினம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அழகான ரோஜாக்கள் தான், அப்படிப்பட்ட இந்த ரோஜாக்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் பெங்களூருவின் கெம்பெகவுடா சர்வதேச விமான நிலையம் தனது மலர்க் களஞ்சியம் என்ற பெயரை உலகிற்கு நிரூபித்துள்ளது.

2026 ம் ஆண்டு காதலர் தின கொண்டாட்டத்திற்காக BLR சர்வதேச விமான நிலையம் கிட்டத்தட்ட 6 கோடிக்கும் அதிகமான ரோஜா மலர்களை(305 மெட்ரிக் டன்) வெற்றிகரமாக பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது.

காதலர் தினத்திற்கு 6 கோடி ரோஜா மலர்கள்: பெங்களூரு விமான நிலையம் படைத்துள்ள சாதனை | Bengaluru Blr Airport Set A Valentine Day Records

கடந்த சில ஆண்டுகளின் மலர் ஏற்றுமதி சாதனையை 2026 ஆம் ஆண்டின் மலர் ஏற்றுமதி முறியடித்து இருப்பதாக பெங்களூரு சர்வதேச விமான நிலைய லிமிடெட் நிறுவன தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்றுமதி செய்யப்படும் மலர்களை இறக்குமதி செய்வதில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது.

அதனை தொடர்ந்து கோலாலம்பூர், அபுதாபி, நியூயார்க் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் உள்ளன.

பெங்களூரு ரோஜாக்கள் இந்த ஆண்டு லண்டன் கேட்விக், லாஸ் ஏஞ்சல்ஸ், டல்லஸ் போர்ட் வொர்த், டொராண்டோ மற்றும் ஆர்லாண்டோ ஆகிய நகரங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

கோடிக்கணக்கான மலர்களை சரியான நேரத்தில் உயர்ந்த தரத்துடன் கொண்டு போய் சேர்ப்பதற்கு முக்கிய காரணம் பிஎல்ஆர் விமான நிலையத்தின் மேம்பட்ட குளிர்பதன கிடங்கு கட்டமைப்பே ஆகும்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *