ரூ.18,662 கோடி திட்டம்: இந்தியாவின் முதல் நீருக்கடியில் சாலை-ரயில் சுரங்கப்பாதை

1 Min Read

இந்தியாவின் முதல் நீருக்கடியில் சாலை-ரயில் சுரங்கப்பாதை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த சாலை – ரயில் சுரங்கப்பாதை திட்டமானது உலக அளவில் இரண்டாவது சுரங்கப்பாதையாக அமையவுள்ளது.

முதலாவதாக இந்த சாலை – ரயில் சுரங்கப்பாதை திட்டம் ஐரோப்பாவில் அமைந்துள்ளது.

ரூ.18,662 கோடி திட்டம்: இந்தியாவின் முதல் நீருக்கடியில் சாலை-ரயில் சுரங்கப்பாதை | 1St Indian Underwater Road Rail Tunnel

இரட்டைப் பாதை

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமானது, ஒரே சுரங்கப்பாதையில் ரயில் பாதையும், தரைவழி வாகனங்களின் பாதையும் அமையவுள்ளது.

இந்த சுரங்கப்பாதை திட்டமானது ரூ.18,662 கோடி செலவில் அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா ஆற்றின் அடியில் 15.79 கிலோ மீட்டர் தூரத்திற்கு உருவாக்கப்பட உள்ளது.

இந்த பாதையானது கோப்பூர் மற்றும் நுமாலிகரை பகுதிகளை இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் 6 மணி நேரப் பயணமானது வெறும் 20 நிமிடங்களாக குறைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்திய பிரதமர் மோடி, அவசர கால தரையிறக்கம் மற்றும் பிரம்மபுத்திரா குறுக்கே அமைந்துள்ள 6 வழிச் சாலை ஆகியவற்றை திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *