உலகின் மிக உயரமான கட்டிடத்தை வடிவமைத்தவர் யார் தெரியுமா?

2 Min Read

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் அமைந்துள்ள புர்ஜ் கலீஃபா என்ற உலகின் மிக உயரமான கட்டிடத்தை வடிவமைத்தவரே, தற்போது ஜெட்டா டவர் என்ற இன்னொரு உயரமான கட்டிடத்தால் சொந்த சாதனையை முறியடித்துள்ளார்.

பெருமைமிகு கட்டிடங்களின்

சவுதி அரேபியாவில் அமையவிருக்கும் ஜெட்டா டவரை வடிவமைத்தவர் அமெரிக்க கட்டிடக்கலை நிபுணரான அட்ரியன் டெவான் ஸ்மித்.

உலகின் மிக உயரமான கட்டிடத்தை வடிவமைத்தவர் யார் தெரியுமா? | Designed World Tallest Building

துபாயில் அமைந்துள்ள புர்ஜ் கலீஃபா கட்டிடத்தின் உயரம் 2,722 அடி என கூறப்படும் நிலையில், ஜெட்டா டவரின் உயரம் தோராயமாக 3,281 அடி என்றே தெரிய வருகிறது.

அமெரிக்காவில் 1944 ஆகஸ்டு மாதம் பிறந்த அட்ரியன் ஸ்மித், உலகெங்கிலும் உள்ள பல முக்கியமான பெருமைமிகு கட்டிடங்களின் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பில் குறிப்பிடத்தக்க பின்னணி, அனுபவம் மற்றும் ஈடுபாடு கொண்டுள்ளவர்.

கடந்த 2006ல் Gordon Gill நிறுவனத்துடன் இணைந்து சொந்தமாக ஒரு கட்டிடக்கலை நிறுவனம் ஒன்றை அட்ரியன் ஸ்மித் துவங்கினார்.

அவரது மற்ற பல திட்டங்களில், நியூயார்க் நகரில் உள்ள சென்ட்ரல் பார்க் டவர், சிகாகோவில் உள்ள ட்ரம்ப் இன்டர்நேஷனல் ஹொட்டல் மற்றும் டவர், ஷாங்காயில் உள்ள ஜின் மாவோ டவர் மற்றும் நான்ஜிங்கில் உள்ள ஜிஃபெங் டவர் ஆகியவற்றின் மூத்த கட்டிடக் கலைஞராக செயல்பட்டுள்ளார்.

வாழ்க்கை முழுவதும்

தெற்கு கலிபோர்னியாவில் வளர்ந்த ஸ்மித் டெக்சாஸ் ஏ&எம் பல்கலைக்கழகத்தில் பயின்று, கட்டிடக்கலையில் இளங்கலைப் பட்டம் பெற்றார், அதே நேரத்தில் கேடட் படைப்பிரிவில் ஈடுபட்டார்.

இருப்பினும் கல்லூரி காலத்திலேயே SOM நிறுவனத்திற்காக பணியாற்றத் தொடங்கினார். அவர் இல்லினாய்ஸ் பல்கலைக்கழக சிகாகோ கட்டிடக்கலை மற்றும் கலைக் கல்லூரியில் தனது கல்வியை முடித்து, 1969 இல் பட்டம் பெற்றார்.

உலகின் மிக உயரமான கட்டிடத்தை வடிவமைத்தவர் யார் தெரியுமா? | Designed World Tallest Building

2013 ஆம் ஆண்டில், டெக்சாஸ் ஏ&எம் பல்கலைக்கழகத்தில் இருந்து ஸ்மித்துக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தனது வாழ்க்கை முழுவதும், தனது கட்டிடக்கலை அறிவை விரிவுரைகள், குழுக்கள் மற்றும் முக்கிய உரைகள் மூலம் ஸ்மித் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நியூயார்க் (2018) மற்றும் வாஷிங்டன் டி.சி (2012) உட்பட ஏழு AIA மாநாடுகளில் அவர் உரைகளை வழங்கியுள்ளார். அவர் 2024 இல் ஓய்வு பெற்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *