அநீதி, அராஜகம், தில்லுமுல்லு இவையெல்லாம் திமுக முதற்றே உலகு என விஜய் பேசியுள்ளார்.
தவெக 3வது ஆண்டு தொடக்க விழா
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 3வது ஆண்டு தொடக்க விழா, சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் தவெக தலைவர் விஜய் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கொள்கை தலைவர்களின் புகைப்படங்களுக்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
அதன் பின்னர் பேசிய தவெக தலைவர் விஜய், “தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகம் மிகப்பெரிய கட்சியாக வளர்ந்திருப்பதற்கு காரணம் தொண்டர்கள் தான். தமிழக வெற்றிக்கழகத்தின் வளர்ச்சிக்கு தலைமை தொண்டனாக எனது வாழ்த்துகள்.
காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் போன்ற தலைவர்கள் அமர்ந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களா என மக்கள் கண்ணீர் சிந்துகின்றனர். அந்த கண்ணீரை துடைக்க துவங்கப்பட்ட கட்சிதான் தவெக.
எம்ஜிஆர் கட்சி தொடங்கிய போது சட்டசபையில் கேலி செய்தனர். அவருக்கு என்ன அனுபவம் உள்ளது? பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லை. திரைக்கவர்ச்சியை வைத்து அரசியலுக்கு வந்துள்ளார், கேள்விக்கு கேட்க மட்டும் தான் தெரியும் என விமர்சித்தார்கள்.
அநீதி, அராஜகம், தில்லுமுல்லு
இதையெல்லாம் அமைதியாக கவனித்த மக்கள் என்ன செய்தார்கள் என்பதும் உங்களுக்கு தெரியும். இப்போது நாம் கட்சி தொடங்கிய போதும் அதே தான் பேசுறாங்க.

அந்த தேஞ்சுப் போன, துருப்பிடிச்சு போன Weapon-ஐ இப்போதும் எடுக்குறீங்களே கொஞ்சம் உங்க டெக்னிக்கை மாத்துங்க. பவளவிழா பாப்பாவிற்கு என்ன தெரியும் பழைய டப்பாவை தான் உருட்ட தெரியும்.
ஆனால், அதற்காக எல்லாம் அவர்கள் செய்யும் தவறுகளை, ஊழல்களை சொல்லிக் காட்டாமல் இருக்க முடியாது. மக்களுடைய ஒரே பிரதிநிதி தவெக மட்டும்தான். திமுகவை தொடர்ந்து நாம் விமர்சனம் செய்வோம்.




