மக்கள் விடுதலை முன்னணி பாரதிய ஜனதா கட்சி ஆகிய பொதுச் செயலாளர்களுக்கிடையில் சந்திப்பு

Admin
By
Admin
1 Min Read
பாரதிய ஜனதா கட்சியின் அழைப்பின் பேரில் இந்தியாவில் விஜயம் மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான குழுவினர், கடந்த 28ஆம் திகதி பாரதிய ஜனதா கட்சியின் (BJP) அமைப்புப் பொறுப்பை வகிக்கும் தேசியப் பொதுச் செயலாளர் ஸ்ரீ பி.எல். சந்தோஷை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
பாரதிய ஜனதா கட்சியின் வரலாறு மற்றும் அமைப்பு முறை குறித்தும், கிராம மட்டம் வரை கட்சி உறுப்புரிமையை ஒழுங்கமைக்கும் விதம் குறித்தும், இந்தியாவின் வளர்ச்சி தொடர்பில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்தும், பிரதமர் நரேந்திர மோடியால் வழங்கப்பட்டு வரும் தலைமைத்துவம் குறித்தும் ஸ்ரீ பி.எல். சந்தோஷ் அவர்கள் விரிவாக விளக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இரு நாடுகளுக்கு இடையிலான உறவையும் நட்புறவையும் வளர்த்துக்கொள்வதில் இரு கட்சிகளுக்கு இடையிலான நட்புறவையும் புரிதலையும் வளர்த்துக்கொள்வதன் முக்கியத்துவம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்புக்கு இணையாக, பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அமைப்பின் தேசியத் தலைவி ,பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அமைப்பின் பிரதிநிதிகளுடனும் ரில்வின் சில்வா தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *